Monday 23rd December 2024

விட்டமின் டி குறைபாடு கூட இரத்த அழுத்தத்தை அதிகரிக்குமா..? அறிகுறிகளை தெரிஞ்சுக்கோங்க..!

May 7, 2024

வைட்டமின் டி குறைபாடு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக பழுப்பு அல்லது கருமையான தோல் கொண்ட நபர்களுக்கு அதிக அளவு மெலனின்
அதிக ரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர் டென்ஷன் என்பது நமது இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஒரு மிக ஆபத்தான மருத்துவ நிலையாக கருதப்படுகிறது. பல சூழ்நிலைகளில் இது ஒருவரின் இறப்புக்கு கூட காரணமாக அமையலாம். வைட்டமின் டி ஊட்டச்சத்து பொதுவாக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பங்கு வகிப்பதாக அறியப்படுகிறது. எனினும் இது ரத்த அழுத்த சீரமைப்பிலும் முக்கிய பங்காற்றுவதாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் டி குறைபாடு நமது எலும்புகளை வலுவிழக்க செய்கிறது. ஆனால் அதற்கு ரத்த அழுத்தத்துடனான தொடர்பு பற்றி இன்னும் முழுதாக தெரியவில்லை. எனினும் வைட்டமின் டி குறைபாடு மற்றும் அதிக ரத்த அழுத்தம் இடையே முக்கியமான தொடர்பு இருப்பதாக ஒரு சில ஆராய்சிகள் காட்டுகின்றது.
வைட்டமின் டி சத்தானது ஒரு சில கெமிக்கல்கள் மூலமாக உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை சீராக்கி ரத்த நாள புறணிகளை ஆரோக்கியமாகவும், நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் பராமரிக்கிறது என்று ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி அளவுகள் குறைவாக இருந்தால் தமனிகள் இறுக்கமாகி அதனால் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. 25-ஹைட்ராக்சி வைட்டமின் டி அளவை 10% அதிகரிக்கும் பொழுது ஹைப்பர் டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 8.1% குறைவதாக ஒரு ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது சம்பந்தமான கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது…

வைட்டமின் டி ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் :

வைட்டமின் டி குறைபாடு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக பழுப்பு அல்லது கருமையான தோல் கொண்ட நபர்களுக்கு அதிக அளவு மெலனின் இருக்கும் என்ற காரணத்தால் அவர்களுடைய தோலினால் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி உற்பத்தி செய்வது கடினம் ஆகிறது. மேலும் வெளியில் அதிகமாக நேரத்தை செலவிடாத நபர்கள், வயதானவர்கள் மற்றும் ஒரு சில மருத்துவ நிலைகளினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் கட்டாயமாக வைட்டமின் டி குறைபாடு குறைபாட்டிற்கான பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

வைட்டமின் டி குறைபாடு பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் ஒரு எளிமையான ரத்தப் பரிசோதனை எடுத்தால் போதுமானது. காலை நேரத்தில் சூரியனில் சிறிது நேரம் செலவிடுவது, முட்டை, பால் மற்றும் சீஸ் போன்ற வைட்டமின் டி உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கலாம். வைட்டமின் டி ஊட்டச்சத்து ரத்த அழுத்த பராமரிப்பில் பங்கு ஆற்றுகிறது அல்லது அதற்கு தொடர்பில்லை என்பதையும் தாண்டி இந்த ஊட்டச்சத்து நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமான ஒரு போஷாக்காக இருப்பதால் தினமும் உங்கள் டயட்டில் வைட்டமின் டி இருப்பதை உறுதி செய்வது நல்லது.

செய்திகள்

s