Monday 7th April 2025

மீண்டும் அதிகரிக்கும் தங்கம் விலை… நகை பிரியர்கள் ஷாக்.. எவ்வளவு தெரியுமா?

May 7, 2024

மே மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று மே 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,640-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,439க்கும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,512க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88.50க்கும், ஒரு கிலோ ரூ.88,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகள்

s