போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, பிரபல பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர்.
சமீப காலமாக சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்குசங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் கூறி வந்தார். சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்தனர்.
கடந்தாண்டு தமிழக அமைச்சர்கள் தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோ பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
விபத்தில் சிக்கியது போலீஸ் வாகனம்!
சவுக்கு சங்கரை கோவை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம், தாராபுரம் அருகே விபத்தில் சிக்கியது. போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.