Monday 23rd December 2024

பிளஸ் 2 தேர்வில் ‘7 அரசு பள்ளிகள்! முழு தேர்ச்சி

May 7, 2024

பிளஸ் 2 பொதுத்தேர்வில், 397 அரசு பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று, திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாணவர்களில் 92.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, இணை இயக்குனர்கள் செல்வக்குமார், நரேஷ் முடிவுகளை வெளியிட்டனர்.

தமிழகத்தின் 7,532 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த, 4.08 லட்சம் மாணவர்கள், 3.52 லட்சம் மாணவியர், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என 7.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 41,000 பேர் ஒரு பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.53 சதவீதம் உயர்ந்துள்ளது.

மாணவியர் 4.07 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக அவர்கள் முன்னிலையில் உள்ளனர்.

தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளிகளில் 92.11 சதவீதம் பேரும்; சிறைவாசிகளில் 92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், 97.45 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. அனைவரும் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளிலும் திருப்பூர் முதலிடத்தில் உள்ளது.

அறிவியல், கணிதம் அடங்கிய பாடத்தொகுப்பில் அதிகபட்சமாக 96.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

தொழிற்கல்வி அல்லாத பாடங்களில் அதிகபட்சமாக பயோ கெமிஸ்ட்ரி 100 சதவீதம்; மைக்ரோ பயாலஜி 99.93, கணினி அறிவியல் 99.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக கணக்கு பதிவியலில் 96.61 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்

தொழிற்கல்வியில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி, சிவில் இன்ஜினியரிங்கில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் 26,352 பேர், ஏதோ ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 6,996 பேர் சென்டம் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 7 பேர் மட்டுமே பெற முடிந்தது. வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

முதலாம் மொழிப் பாடத்தில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் 10,000 பேர் தேர்ச்சி பெறவில்லை.

செய்திகள்

s