Monday 23rd December 2024

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்.. அனல்பறக்க வெளியான டைட்டில்.. இயக்குனர் யார் தெரியுமா..?

May 7, 2024

2019 ஆம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படமே பெயர் சொல்லும் படமாக மாஸ் ஹிட் கொடுத்தது. அடுத்து 2022 ஆம் ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தானே ஹீரோவாக அந்த படத்தில் அறிமுகமானார்.

கோமாளி படத்தின் இயக்குனர் என்றதும் லவ் டுடே படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாகவே இருந்தது. கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவான இந்த படம் வெளியாகி இளசுகளின் மத்தியில் கொண்டப்பட்டது.

இன்றைய தலைமுறையினரின் காதல் கதையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. படத்தில் பிரதீப்பின் நடிப்புக்கு ரசிகர்கள் குவிந்தனர். இயக்கிய இரண்டு படங்களுமே ஹிட் கொடுத்த நிலையில், பிரதீப் ரங்கானத்துக்கான மவுசு திரையுலகில் அதிகரிக்க தொடங்கியது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் பாலிசி’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரதீபுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அனல் பறக்க வெளியாகியுள்ளது. அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் பிரதீப். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியானது. படத்திற்கு டிராகன் (Dragon) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அர்ச்சனா கலப்பாத்தி பட்டனை அமுக்க அனல்பறக்கும் நெருப்புக்கு மத்தியில் டைட்டில் வெளியானது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. வெற்றி இயக்குனர், வெற்றி நாயகன் இவர்கள் இருவரின் காம்போவில் உருவாகவுள்ள இந்த படம் ரசிகர்களை கவருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

செய்திகள்

s