Monday 23rd December 2024

ஓடிடி-யில் வெளியாகப் போகும் விஜய் ஆண்டனி படம்… ரிலீஸ் தேதி இதுதான்!!

May 7, 2024

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி ஓரளவு வரவேற்பு பெற்ற ரோமியோ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார்.
கதை அம்சம் உள்ள படங்களை விஜய் ஆண்டனி தேர்வு செய்து நடிப்பதால் இவரது படத்திற்கு பெரும்பாலும் வரவேற்பு கிடைக்கிறது.
விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற திரைப்படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியானது.
திருமணத்தில் விருப்பம் இல்லாத மனைவி – அவரை காதலிக்கும் கணவன் என்ற கதை களத்தில் நகைச்சுவையுடன் கூடிய படமாக ரோமியோ வெளிவந்தது.
இருப்பினும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை கிடைத்ததால் சுமாரான வரவேற்பு மட்டுமே பெற்றது.

இந்த நிலையில் ரோமியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது…

இம்மாதம் 10-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரோமியோ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டரில் படம் வெளியாகி சரியாக ஒரே மாதத்தில் ரோமியோ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

செய்திகள்

s