உங்கள் குழந்தையின் உணர்வுகளை அவர்கள் சொல்ல கேட்பதன் மூலமும், நீங்கள் அவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுங்கள்.அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்கி கொடுங்கள்.
அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் சமீப ஆண்டுகளாக மாற்றம் கண்டுள்ள நமது வாழ்க்கை முறை, பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குழந்தைகள் பெரும்பாலும் அமைதியான இயல்பை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் உடல் பிரச்சனைகளை கூற முடிந்தாலும் மனநல பிரச்சனைகளை பெற்றோரிடம் சரியாக விளக்க முடியாது என்பதே உண்மை. உங்கள் குழந்தைக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை என்பதற்கான அறிகுறிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
குழந்தையின் உணர்ச்சி தேவைகளுக்கு கவனம் செலுத்துங்கள்: உங்கள் குழந்தையின் உணர்வுகளை அவர்கள் சொல்ல கேட்பதன் மூலமும், நீங்கள் அவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுங்கள்.அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்கி கொடுங்கள்.
எப்போதும் சோகமாக அல்லது அழுவது போல உங்கள் குழந்தை இருக்கிறதா.? உங்கள் குழந்தையின் மனநிலை மாற்றத்திற்கு வெளிப்படையான காரணம் இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் அடிக்கடி சோகமாகவோ அல்லது கண்களில் கண்ணீரோடு இருக்கிறார்களா? இதற்கு காரணம் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிரமம் அல்லது அவர்களை தொந்தரவு செய்யும் விஷயத்தை வெளிப்படுத்துவதில் சிரமத்தை சந்திப்பதாக இருக்கலாம்.
குழந்தையின் நடத்தையில் மாற்றங்கள்: உங்கள் குழந்தையின் நடத்தை அல்லது ஆளுமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நீங்கள் சமீபமாக கவனிக்கிறீர்களா? அதாவது அவர்கள் எரிச்சலுடன் அல்லது கவலையுடன் இருப்பது போல. அவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் ஏற்படலாம், சில சமயங்களில் கோபமாக இருப்பது அல்லது கீழ்ப்படிய மறுப்பது உள்ளிட்ட நடத்தையை அவர்கள் வெளிப்படுத்தலாம்.
மன அழுத்தமிக்க சூழலை சமாளிப்பதில் சிரமம்: அன்றாடம் ஏற்படும் இயல்பான மன அழுத்தங்கள் அல்லது சவால்களை சமாளிக்க கூட உங்கள் குழந்தை போரட்டத்தை சந்திக்கிறதா? சிறிய மாற்றங்கள் ஏற்பட்டால் கூட எளிதில் மன உளைச்சல் அவர்களுக்கு ஏற்படுகிறதா? உதாரணமாக புதிய பள்ளி ஆண்டை தொடங்குவது அல்லது குடும்ப மாற்றங்களை எதிர்கொள்வது போன்ற மாற்றங்கள் அல்லது மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தங்களை மாற்றி கொள்வதில் சிரமத்தை சந்திப்பார்கள்.
உங்கள் குழந்தை தனிமையை விரும்புகிறதா… உங்கள் குழந்தை தனது வயதை ஒத்த சக குழந்தைகளிடம் விளையாடுவதை தவிர்க்கிறதா? குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி தனியாக நேரத்தை செலவிட விரும்புகிறதா. உங்கள் குழந்தைகள் சமூக நடவடிக்கைகள், விளையாட்டு அல்லது குழு அமைப்புகளில் பங்கேற்க தயக்கம் அல்லது மறுப்பு காட்டுவது அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை என்பதற்கான அறிகுறியாகும்.
கவனம் செலுத்துவதில் சிரமம்: உங்கள் குழந்தைக்கு பள்ளியில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவது என்பது, கல்வியில் அவர்களின் செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கிறது. பள்ளிக்கு செல்வது அல்லது, வீட்டுப் பாடங்களை முடிப்பதில் ஆர்வமற்றவர்களாகவோ அல்லது ஊக்கமில்லாதவர்களாகவோ இருப்பார்கள்.
தூக்கத்தில் மாற்றம்: தூங்குவதில் சிரமம், அடிக்கடி இரவு நேரங்களில் விழித்து கொள்வது அல்லது வழக்கத்தை விட அதிக நேரம் தூங்குவது போன்ற தூக்க முறையில் மாற்றங்களை எதிர்கொள்ளலாம். கனவுகள் அல்லது கவலைகள் காரணமாக தூங்குவதில் சிரமம் அவர்களுக்கு இருப்பதை கவனித்தால் அவர்களுக்கு உங்களது உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குங்கள்.
உடல் ரீதியான அறிகுறிகள்: உங்கள் குழந்தை மருத்துவ காரணங்கள் ஏதுமின்றி தலைவலி, வயிற்றுவலி அல்லது muscle tension போன்ற அறிகுறிகளை பற்றி சொன்னால் இவை மன அழுத்தம், பதட்டம் அல்லது மன உளைச்சல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
பள்ளிக்கு செல்வதை தவிர்க்க நினைக்கிறதா… பயம், பதட்டம் அல்லது பள்ளியில் காட்டப்படும் கண்டிப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, உங்கள் குழந்தை அடிக்கடி பள்ளிக்குச் செல்ல மறுக்க கூடும். வீட்டிலேயே இருக்க விரும்புவார்கள் அல்லது தங்களைத் தனிமைப்படுத்தி கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.
பசியில் ஏற்படும் மாற்றங்கள்: உங்கள் குழந்தை பசி ரீதியாக பசியின்மை அல்லது தனது வழக்கமான உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை எதிர் கொள்கிறதா? அதாவது பசியின்மையால் அறவே உணவை தவிர்ப்பது அல்லது அதிகமாக உண்பது . இதனால் அவர்களின் உடல் எடையில் அசாதாரண மாற்றங்களை காணலாம்.