பிரதமர் மோடியின் அரசியல் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமா?. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
பா.ஜ., கூட்டணியைச் சேர்ந்த மஜத எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?. பிரதமர் பதில் சொல்ல வேண்டும்.
இந்திய மக்களுக்கு அநியாயம் ஏற்படும் போது குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பது போல் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இவ்வளவு பெரிய குற்றவாளி எப்படி எளிதாக நாட்டை விட்டு தப்பினார்.
குற்றவாளிகளுக்கு பிரதமர் மோடி மவுனமாக ஆதரவளிப்பது நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளை உற்சாகப்படுத்துகிறது. பிரதமர் மோடியின் அரசியல் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமா?. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.