சீன விஞ்ஞானி குய் வான்ஜாவோ கூறியதாவது. செல்போன் கோபுரங்களுக்குப் பதிலாக, நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்புத் துறையில் அடுத்தகட்ட நகர்வாகும். இது படிப்படியாக, பொதுப் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு குய் வான்ஜாவோ தெரிவித்தார்.
புயல், பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது, செல்போன் கோபுரங்கள்பாதிக்கப்படுவதால் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படுகின்றன. இதனால், மீட்புப்பணிகளில் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆனால், செயற்கைக்கோள் மூலம் இயற்கை பேரிடர்களின்போதும் அழைப்பை மேற்கொள்ளமுடியும். இதற்கான தொழில்நுட்பத்தை சீனா தற்போது உருவாக்கி யுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனம் செயற்கைக்கோள்கள் வழியாக அழைப்பை மேற்கொள்ளும் வசதியைக் கொண்ட மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஷாவ்மி, ஹானர், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இத்தகைய வசதியைக் கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.